Mar 7, 2014

Indoor Maps - பிரபல கட்டிடங்களின் உள்வரைபட அமைப்பினை கூகிள் மேப்பில் பார்க்க

3 Comments
கூகிள் மேப்ஸ் (Google Maps) சேவை பல நாடுகளின் தெளிவான வரைபடங்களைப் பார்க்க உதவும் ஒன்றாகும். இதன் மூலம் போக்குவரத்து, நகரங்கள், கடைகள் போன்ற பலவற்றை வரைபடத்தில் எளிதாகப் பார்த்துக் கொள்ள முடியும். இதிலிருக்கும் ஒரு வசதி தான் Indoor Maps.

இதன் மூலம் நகரத்தில் உள்ள முக்கியமான / பிரபலமான கட்டிடங்களின் உள் வரைபடத்தினைத் தெளிவாக பார்க்க முடியும். இதில் ஷாப்பிங் மால்கள், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், அருங்காட்சியங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை அடங்கும்.

Indoor Maps மூலம் கடையில் எங்கே இருக்கிறீர்கள், எந்த மாடியில் இருக்கிறீர்கள், வேறு கடைகளின் இடங்கள் போன்றவற்றை அறியலாம். இந்த வசதி தற்போது இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற 22 முக்கிய நகரங்களில் 75 இடங்களுக்கு வந்துள்ளது.

Google Indoor Maps
 
Also Read: படங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள். 

சென்னையில் Ampa SkyWalk, Bergamo, Forum Vijay Mall, Ramee Mall, Spectrum போன்ற இடங்களில் Indoor Maps வசதியினைப் பெறலாம். குறிப்பிட்ட கடைகளுக்கு நீங்கள் செல்லும் போது உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் மொபைல்களில் முழுவதும் Zoom செய்து இந்த வசதியைப் பயன்படுத்தலாம். நீங்கள் வணிக வளாகங்கள் வைத்திருப்பின் உங்களுக்கான Indoor Maps ஐ Upload செய்யவும் முடியும். எந்தெந்த இடங்களில் Indoor Maps பார்க்கலாம் என்பதைப் பார்க்க

Also Read:  உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project
Read More

Feb 17, 2014

படங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.

7 Comments
வேறு மொழிப்படங்கள் பார்க்கும் போது ஆங்கிலத்தில் சப்-டைட்டில் (Sub-titles) இருந்தால் மட்டுமே வசன உரையாடல்களை சிலரால் புரிந்து கொள்ள முடியும். இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யும் படங்களில் சப்-டைட்டில்கள் கூடவே வர வில்லையெனில் அதனை எப்படி பெறுவது என்று முன்பொரு பதிவில் எழுதியிருந்தேன்.

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி?

அடுத்ததாக படம் பார்க்கும் போது சில படங்களில் சப்-டைட்டில்கள் வீடியோவுடன் ஒத்திசைந்து வராமல் (Syncing) வீடியோக்கு முன்னோ பின்னோ வரலாம். ஏனெனில் டிவிடியாக வாங்கும் போது மட்டுமே படத்தின் சப்டைட்டில் சரியாக வரும். இணையத்தில் பலரும் அதனை Rip செய்து வெளிவிடுவதால் சப்டைட்டில்களின் நேரங்கள் சிறிது மாறி விடுகின்றன. இதற்கு சப்-டைட்டில்களின் நேரத்தை மாற்றியாக வேண்டும். இதற்கு உதவும் ஒரு மென்பொருள் தான் Subtitle Workshop.
Subtitle Workshop

இதன் வசதிகள்:

1.இந்த மென்பொருளின் மூலம் புதிய படங்களுக்கு சப்-டைட்டில்களை உருவாக்க முடியும்.
2.ஏற்கனவே உருவாக்கப்பட்ட சப்-டைட்டில்களின் நேர அமைப்பு (Timings) மாறியிருப்பின் சரிபார்த்து திருத்திக் கொள்ள முடியும்.
3.Text இல் எதேனும் தவறு இருப்பின் வசனங்களை மாற்றலாம்.
வசனங்களை இடையில் சேர்க்கவும் அழிக்கவும் முடியும்.
4.பெரிய சப்-டைட்டில் பகுதிகளை இரண்டாக Split செய்யலாம். சிறிய பல பகுதிகளை ஒன்றிணைக்கலாம்.
5.வீடியோ / படத்தினைத் திறந்து Preview பார்த்துக் கொண்டே மாற்றங்கள் செய்யலாம்.

Time Adjust செய்ய

முதலில் படத்தினை ஓடவிட்டு எந்த நிமிடத்தில் ஆரம்பிக்கிறது என்று குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மென்பொருளில் சப்-டைட்டில் கோப்பினைத் திறந்து முதல் வசனம் வரும் நிமிடம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் வித்தியாச அளவினை (Time Difference) குறிப்பெடுங்கள்.
Subtitle Workshop
Edit -> Timings மெனுவில் Set Delay என்பதைக் கிளிக் செய்து எவ்வளவு விநாடிகள்/ நிமிடங்கள் மாறுகிறதோ அதனைக் கொடுக்கலாம். இதில் உதாரணமாக 5 விநாடிகள் எனில் 00:00:05,000 என்று இருக்க வேண்டும். மேலும் சப்-டைட்டில்கள் தாமதமாக வர “-” குறியிடையும் வேகமாக வர “+” குறியீடையும் தேர்வு செய்யுங்கள். இதனைச் சேமிக்கும் போது Save as இல் SubRip (.SRT) என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

மேலும் இந்த Timings மெனுவில் Set Duration limits, Adjust, Extend Length, Time Expander/Reducer போன்ற பல வசதிகளும் இருக்கின்றன.

சப்-டைட்டில்களை எப்படி படம் பார்க்கும் போது வரச்செய்வது அல்லது VLC Player இல் எப்படி வரச்செய்வது என்றறிய கிளிக் செய்யுங்கள். View Subtitles / Open Subtitles in VLC

Download Subtitle Workshop official  |   SourceForge Link
Read More

Dec 17, 2013

கூகிள் ப்ளஸின் கிறிஸ்துமஸ் சிறப்பு வசதிகள் - Auto Awesome Effects

5 Comments
கூகிள் ப்ளஸில் புகைப்படங்களை ஏற்றிப் பகிரும் போது தானாகவே சில புகைப்படங்களுக்கு குறிப்பிட்ட ஸ்பெஷல் எபெக்ட் (Special Effects) சேர்க்கப்படுவதை Auto Awesome Effects என்று சொல்வார்கள். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அதையொட்டிய விடுமுறைகள் வருவதால் இரண்டு அட்டகாசமான வசதிகளை இந்த Auto Awesome இல் சேர்த்துள்ளார்கள்.

1. Twinkle Effect – நீங்கள் சேர்க்கும் புகைப்படங்கள், எதாவது விளக்குகள் அல்லது ஒளி பிரகாசமாக மின்னுகின்றவாறு இருந்தால் அந்த புகைப்படத்தில் உண்மையில் ஒளி வருகின்ற மாதிரி அனிமேஷன் சேர்க்கப்படும்.


எடுத்துக்காட்டுக்கு Christmas Tree, Chandelier எனப்படும் அலங்கார விளக்குகள் போன்ற படங்கள்

2. Snow Fall Effect – உங்கள் புகைப்படங்கள் பனிப்பிரதேசங்கள் அல்லது பனி கொட்டுகின்ற மாதிரி எடுக்கப்பட்டிருந்தால் அவற்றில் உண்மையில் பனி கொட்டுகின்ற மாதிரி மாற்றப்படும்.


இந்த இரண்டு அருமையான வசதிகளும் புதிதாக சேர்க்கப்படும் புகைப்படங்களுக்கு மட்டுமே சேர்க்கப்படும். புதிய புகைப்படங்கள் இந்த எபெக்ட்டில் மாற்றப்பட்ட பின் உங்களுக்கு அறிவிப்பு கிடைக்கும்.

Also Read: Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று இலவச மென்பொருள்கள்

கூகிள் ப்ளஸ் ஆண்ட்ராய்ட் புதிய வசதிகள்: - ஆண்ட்ராய்டு வெர்சனிலும் சில புதிய வசதிகள் வந்துள்ளன. இதற்கு நீங்கள் புதிய வெர்சன் Google+ 4.2.4 க்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.


Auto Snow Effect - நீங்கள் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது மொபைலை ஒரு முறை Shake செய்தாலே Snow Fall Effect இல் மாறிவிடும். மறுபடியும் மொபைலை அசைத்து சேமித்துக் கொள்ளலாம்.


• நீங்கள் எதேனும் பதிவுகளுக்கு +1 பட்டனில் கிளிக் செய்யும் போது Lovely Hearts வடிவங்கள் காட்டப்படும் ( இதுவும் Christmas Holiday Special )

• People, Communities, Photos என அனைத்தையும் ஒரே இடத்தில் தேடிக் கொள்கிற Unified Search box வசதி.

• பல வகையான தலைப்புகளில் What’s Hot பதிவுகளை பார்க்கும் வசதி.

மேலும் நிறைய அழகான Auto Awesome Effect புகைப்படங்களை கூகிள் ப்ளசில் பார்க்கலாம். https://plus.google.com/s/%23AutoAwesome 

Enjoy Christmas ;-))
Read More

Dec 15, 2013

Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று இலவச மென்பொருள்கள்

9 Comments
கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரியாமல் இருக்காது. 1997 ஆம் வருடத்தில் வெளியான இந்த மென்பொருள் பாட்டு கேட்பதற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெர்ஷன் கூட வெளியிட்டிருந்தார்கள்.
இதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல் இதற்கு எந்த வித Updates மற்றும் Support கிடைக்கப் போவதில்லை; ஆனால் தரவிறக்கி தொடர்ந்து பயன்படுத்தலாம். இருப்பினும் பலரும் மாற்று மென்பொருள்களைத் தேடுவதால் சில குறிப்பிடத்தக்கவற்றை கீழே பார்க்கலாம்.

1.Media Monkey

நீங்கள் ஏராளமான பாடல்களை பயன்படுத்தி வந்தால் இதில் எளிதாக organize செய்ய முடியும். இது பல வகையான ஆடியோ ஃபைல்களை (mp3, aac, wav, flac, ogg) ஆதரிக்கிறது. மேலும் பல வகையான பார்மேட்களுக்கு இதிலிருந்தே கன்வர்ட் செய்து கொள்ள முடியும். Download MediaMonkey

2. AIMP

இந்த மென்பொருள் எளிமையான தோற்றத்திலும் தரமான ஆடியோ வசதியிலும் Winamp போன்றே இருக்கிறது. இதிலும் Audio Converter, Tag editor போன்ற வசதிகள் உள்ளன. விண் ஆம்ப் மென்பொருளை விரும்பியவர்கள் இதனைத் தேர்வு செய்யலாம். Download AIMP

Read Also: ப்ரவுசர் டேப்கள், கோப்புகளை இணையத்தில் Sync செய்து பயன்படுத்த CupCloud

3. VLC Player

வீடியோ மென்பொருளான VLC Player இலும் பாட்டு கேட்கலாம். இது அனைத்து வகையான ஆடியோ வீடியோ வகைகளையும் சப்போர்ட் செய்வதும் இதன் தோற்றமும் பயன்படுத்த எளிமையாக இருக்கும். இப்போதைக்கு நான் பயன்படுத்துவதும் இதே! Download VLC

4. MusicBee

ஏராளமான ஆடியோ ஃபைல்களை கையாள்வோருக்கு organize செய்யப் பயன்படும் இந்த மென்பொருள் Winamp மற்றும் MediaMonkey போன்றே வசதிகளைக் கொண்டது. இதில் உங்களின் அனைத்துப் பாடல்களையும் ஒரே நேரத்தில் tracks, albums, artists போன்ற வழிகளில் பார்க்கலாம். இதில் Automatic tagging மற்றும் manual tagging வசதிகளும் இருக்கின்றன. Download Musicbee

5. Apple iTunes


ஆப்பிள் நிறுவனத்தின் iTunes ஆடியோ பிளேயர் வசதியுடன் podcasts, manage local library, playlist creation, radio listening போன்றவற்றுக்கும் பயன்படுவதாகும். மேலும் iPhone, iPad போன்றவற்றோடு எளிதாக கணிணியில் பாடல்களை Sync செய்து கொள்ளவும் முடியும். இதனை ஆப்பிள் ரசிகர்கள் மட்டுமின்றி விண்டோஸ் பயனர்களும் பயன்படுத்திப் பார்க்கலாம். Download iTunes

6. Windows Music Player:

விண்டோஸ் கணிணிகளில் தானாகவே நிறுவப்பட்டு வரும் மென்பொருள் இது தான். இதுவும் ஆரம்பத்தில் பிரபலமான ஒன்று தான். இப்போதும் வேறு மென்பொருள்களைப் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு இது தான் Default Player. எளிமையான தோற்றத்தை உடைய இதில் பாடல்களை Playlist, Library போன்றவற்றில் Organize செய்யவும் முடியும். ஆனால் குறிப்பிட்ட ஃபைல் வகைகளை மட்டுமே ஆதரிக்கும்.

உங்களுக்கு பிடித்தது எது, நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் எதுவென்று கமெண்ட்டில் சொல்லுங்கள் நண்பர்களே! நன்றி.

Read Also: சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்

Read More

Nov 28, 2013

ப்ரவுசர் டேப்கள், கோப்புகளை இணையத்தில் Sync செய்து பயன்படுத்த CupCloud

2 Comments
இணையத்தில் முக்கியமான செயலில் இருக்கும் போதும் அல்லது கணிணியில் எதாவது ஒரு கோப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் வேறு அவசர அழைப்புகளோ அல்லது சந்திப்புகளோ திடிரென வந்து விடும். தேடிக் கொண்டிருக்கும் விசயத்தை பாதியில் போட்டு விட்டு போகவும் முடியாது. திரும்ப வருவதற்கு நேரமானால் என்ன செய்வது? செல்லும் இடத்தில் நாம் செய்த வேலையை விட்ட இடத்திலிருந்து தொடரும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா?


இதற்கு கண்டிப்பாக Cloud Computing எனப்படும் மேகக்கணிணி சேவை தான் பயன்படும் என்று தெரிந்திருக்கும். உங்கள் ஃபைல்களை Google Drive / Dropbox இல் ஏற்றி வைத்து இணையத்தில் எங்கே வேண்டுமென்றாலும் எடுத்து பயன்படுத்தலாம். அடுத்து நீங்கள் உலவிக் கொண்டிருந்த ப்ரவுசர் டேப்களையும் (Browser Tab) இணையத்தில் சேமித்து பின்னர் தேவையெனில் மீட்டுக்கொண்டால் இன்னும் அருமையல்லவா? இந்த இரண்டு விசயங்களுக்கும் உதவுவது தான் CupCloud எனும் மென்பொருள்.


இந்த மென்பொருள் நீங்கள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் அத்தனை ப்ரவுசர் டேப்கள், நீங்கள் கணிணியில் வேலை செய்யும் குறிப்பிட்ட வகை கோப்புகள், போல்டர்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் இணையத்தில் சேமித்து விடும். இதற்கு Cup என்ற பட்டனையும் திறப்பதற்கு UnCup பட்டனையும் கிளிக் செய்ய வேண்டும். பிறகு எந்த கணிணியிலிருந்தும் விட்ட இடத்திலிருந்து அவற்றைத் திறந்து வேலை செய்யலாம்.


இந்த மென்பொருள் அவசரமாக வெளியே சென்று இணையத்தில் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல,  மறுபடியும் வீட்டிற்கு வந்து நீங்கள் வேலை செய்த டேப்கள், கோப்புகள் அனைத்தையும் உங்கள் கணிணியிலும் ஒரே கிளிக்கில் திறந்து தொடரலாம்.இந்த மென்பொருள் தற்போது Chrome, Internet Explorer, Safari போன்ற உலவிகளும் Microsoft Word, Excel Powerpoint போன்ற கோப்பு வகைகளும் மற்றும் Windows Explorer, Apple Mac Finder, Apple iWork போன்றவற்றையும் பேக்கப் செய்கிறது. மேலும் புதிய வகை ஃபைல்களும் பயன்பாடுகளையும் இதில் கொண்டு வருவதாக குறிப்பிட்டிருக்கிறது.



Read More