Mar 22, 2011

ஏர்செல்லின் புதிய வயர்லெஸ் சேவை Aircel wi-fi


தமிழக நிறுவனமான ஏர்செல் புதிய சேவையாக வயர்லெஸ் இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வயர்லெஸ் என்பது எந்த வயர் தொல்லையின்றி இணையத்தைப் பயன்படுத்துவது ஆகும். நாட்டின் எந்தவொரு இடத்திலும் 512 Kbps வேகமுள்ள பிராண்ட்பேண்ட் இணைய சேவையை இந்த வசதியின் மூலம் பெற முடியும். நகரின் முக்கிய இடங்களில் ஏர்செல் நிறுவியுள்ள பிராண்ட்பேண்ட் சேவையினை வயர்லெஸ் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் பெற முடியும். இந்த வசதியினை Smartphones, laptops, tablet pc, netbooks போன்ற கருவிகளில் ஏர்செல்லின் wi-fi Hotspot கள் இருக்குமிடத்தில் மட்டுமே பெறமுடியும்.

GPRS வசதியெனில் நம்மிடம் சிம் இருக்க வேண்டும். அதைப்போலவே ஏர்செல்லின் Poket Internet க்கும் சிம் தேவை. ஆனால் சிம் இல்லாமல் இவற்றை விட அதிக வேகத்தில் செயல்படக்கூடியது Wi-fi ஆகும். இந்த சேவை தற்போது சென்னை நகரில் குறிப்பிட்ட இடங்களில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

Aircel Wi-fi ஐப் பெறுவது எப்படி?

1.உங்கள் லேப்டாப்பில் அல்லது போனில் வயர்லெஸ் சேவையை
ஆன் செய்து கொள்ளவும்.
2.View Available wireless networks என்பதை டாஸ்க் பாரில் கிளிக் செய்து வரும் விண்டோவில் Refresh செய்து பார்க்கவும்.
3.ஏர்செல்லின் சேவையிருந்தால் ”AIRCEL_SPECTRANET” என்ற பெயரில் தோன்றும். அதைக் கிளிக் செய்து Connect செய்யவும்.
4.பின்னர் உங்கள் வலை உலவிக்குச் சென்று www.google.com என்று தட்டச்சிட்டால் இந்த இணைய சேவையைப் பயன்படுத்த புதிய பயனராக Sign up செய்வதற்கான பக்கம் வரும்.
5. உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்கவும். பின்னர் உங்களுக்கான கடவுச்சொல் SMS மூலம் மொபைல் எண்ணுக்கு அனுப்பப் படும்.
6. கிடைத்த கடவுச்சொல்லை வலைப்பக்கத்தில் அடித்து Submit செய்தால் உங்கள் மொபைலிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும். பின்னர் நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு வயர்லெஸ் இணைய சேவையை பயன்படுத்த முடியும்.



கட்டணங்கள் :

ஏர்செல் அறிமுக வசதியாக இதனை மார்ச் 31 வரை இலவசமாக இந்த வசதியினைப் பெற்றுக் கொள்ள குறிப்பிட்டுள்ளது. அதற்குப் பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ருபாய் 15 வீதம் வயர்லெஸ் சேவையைப் பெற முடியும். இதற்கான கட்டணம் உங்கள் மொபைலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். மொபைலில் போதிய அளவு பணமில்லை என்றால் இந்த வசதியினைப் பெற முடியாது. தரவிறக்க அளவு 30 Mb ஆகும். இதற்கு மேல் தரவிறக்க வேண்டுமெனில் திரும்பவும் 15 ருபாய் கட்டணத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.


தற்போது ஏர்செல் wi-fi கிடைக்குமிடங்கள் :


Bharati Raja Hospital,#20, GN Chetty Road, Chennai, Tamil Nadu

Janapriya center(Big Bazaar-T.Nagar),34, Pondy Bazaar, T. Nagar, Chennai, Tamil Nadu

Indi Mall,132/33, Nelson Manickam Road, Chennai, Tamil Nadu

Vijay Park Inn,#170, Jawaharlal Nehru Salai, Arumbakkam, Chennai, Tamil Nadu

Pothys ,15, Nageswara Rao Road, T. Nagar, Chennai, Tamil Nadu

Malar Hospital,#52, 1st Main Road, Gandhinagar, Adyar, Chennai, Tamil Nadu

Quality Inn Sabari (T.Nagar),#29, Thirumalai Pillai Road, T.Nagar, Chennai, Tamil Nadu

Rayala Techno Park,144/7, Rajiv Gandhi Salai, Kottivakkam, Chennai, Tamil Nadu

Citi Centre (Purasaivakkam),232 (Old No.186), Purasawalkam High Road, Kilpauk, Chennai, Tamil Nadu

Country Inn Hotel Vaigai,# 3, Gandhi Irwin Road, Egmore, Chennai, Tamil Nadu

Ampa Mall,Block No.3 of No.173, Vada Agaram Village, Adjacent to the No. 1 P.H. Road, Chennai, Tamil Nadu

Ramachandra Hospital,#1, Ramachandra Nagar, Porur, Chennai, Tamil Nadu

Hotel Abu Palace,#926, Poonamalle High Road, Chennai, Tamil Nadu

Express Avenue,Club House Road, Mount Rd Chennai, Tamil Nadu

தொடர்புடைய பதிவுகள் :

தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும்
BSNL 2G, 3G டேட்டா கார்டுகளுக்கு இனி அன்லிமிடெட் இல்லை!

5 comments:

  1. வைபி. கனைக்சென் மிக்க மகிழ்ச்சி.சேவைக்கட்டணம் ...?

    ReplyDelete
  2. நல்ல தகவல்....
    இதுபோன்று கம்பெனிகள் வழங்கும் சேவைகளைப் பொதுவான கண்ணோட்டத்தில் நீங்கள் எளிமையாக‌ வழங்குவதை மனதார வரவேற்கிறேன் ஏனெனில் சேவையை வழங்குவோர் வியாபார யுக்திகளுடன்தான் அவர்களது ரைட்-அப் களை விநியோகிக்கிறார்கள்.... இதில் நுகர்வோர் ஏமாந்துவிட வாய்ப்புகள் அதிகம்... நுகர்வோரின் கண்ணோட்டத்தில் நடுநிலையாக சேவை விபரத்தையும் அதற்கான கட்டணத்தையும் குறிப்பாக தரவிறக்கக் கட்டண விபரத்தையும் தெளிவாகக் கூறியுள்ளீர்கள்....! இப்போதைக்கு WiFi வழங்கப்படும் இடங்களையும் குறிப்பிட்டது மிகச் சிறப்பு‍‍!

    ஏர்செல் தமிழக நிறுவனமா? மலேசியாவின் "மேக்சிஸ்" அனந்த கிருஷ்ணன் தானே ஏர்செல்லின் நிறுவனர்?

    நல்ல பதிவு... மேலும் சிறப்பாகத் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல் என்னைபோல வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் நம்ம ஊரு விசயங்களை தெரிந்து கொள்ள மிகவும் வசதியாக உள்ளது இந்த தளம் ..... மிகவும் நன்றி ,,,,,,,,,,,,,

    ReplyDelete
  4. இதோ போல் மற்ற நிறுவணம் wi fi பற்றீ எழுதவும்

    ReplyDelete