May 14, 2011

யூடியுப் வீடியோக்களை எளிதாக mp3, mp4, flv, HD வகைகளில் தரவிறக்க பயர்பாக்ஸ் நீட்சி


யூடியுப் இணையதளத்தில் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட படங்கள் உள்ளன. படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறதோ இல்லையோ இதில் முன்கூட்டியே வெளியிடப்படும். இதில் படங்களைப் பார்ப்பவர்கள் பிடித்திருந்தால் தரவிறக்க வேண்டும் என நினைப்பார்கள். சிலர் மென்பொருள்களின் மூலமும் சில இணையதளங்களின் மூலமாகவும் படங்களைத் தரவிறக்கம் செய்வார்கள். இதில் படங்கள் FLV என்ற வடிவத்தில் இருக்கும். இதனால் படங்களைத் தரவிறக்கி மறுபடியும் நமக்குப் பிடித்த வடிவத்திற்கு மாற்றுவோம்.

வேறு எந்த மென்பொருளின் துணையின்றியும் வேறு இணையதளத்திற்குச் செல்லாமலும் பயர்பாக்ஸ் உலவியில் ஒரு நீட்சியைச் சேர்ப்பதன் மூலம் எளிதாக யூடியுப் படங்களைத் தரவிறக்க முடியும். இந்த நீட்சியின் பெயர் Easy Youtube Video Downloader

இதில் உள்ள சிறப்பு வசதி என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கிற படம் பிடித்திருந்தால் நேரடியாக படத்திற்கு கீழேயே தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் வேண்டிய வகையைத் தேர்வு செய்து தரவிறக்கலாம். Mp3, Mp4, FLV மற்றும் யூடியுபின் புதிய வசதியான High Definition வகையிலும் தரவிறக்க முடியும். சில படங்கள் HD யில் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு கிழே HD என்ற வசதி மட்டும் இருக்காது.


கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து நீட்சியின் பக்கத்திற்குச் சென்று தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
https://addons.mozilla.org/en-us/firefox/addon/easy-youtube-video-downl-10137/

பின்னர் பயர்பாக்ஸ் உலவியை ஒருமுறை Restart செய்துவிட்டு யூடியுப் தளத்திற்குச் சென்று எதாவது ஒரு படத்தைக் கிளிக் செய்து பாருங்கள். வீடியோவிற்குக் கிழே Download as என்ற மெனு புதியதாக இருக்கும். அதில் வேண்டிய வடிவத்தைத் தேர்வு செய்தால் படம் உங்கள் கணிணிக்கு எளிதாக தரவிறக்கப்படும்.

For the Google Chrome users download it http://www.chromeextensions.org/other/easy-youtube-video-downloader/

5 comments:

  1. Thanks ponmalar..

    I have some doubts in my blogger labels...

    I want to expand/collapse the blogger labels...I searched in the net...But not able to find it properly...Can you help with it...

    Can you post a detailed post to it...So it will be useful to several people like me...

    Thanks...

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி பொன்மலர் ... நான் கூகுள் க்ரோம் பயன்படுத்துகிறேன் .. அதில் இவ்வசதியை பெறமுடியும் மா ?

    ReplyDelete
  3. மிக்க நன்றி பொன்மலர்

    ReplyDelete
  4. வணக்கம் சகோ.

    தகவலுக்கு மிக்க நன்றி

    இனியவன்...

    ReplyDelete