கூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ சாங்ஸ் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம். ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் வரிகள் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.
Aug 27, 2011
Youtube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற
8 Commentsகூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ சாங்ஸ் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம். ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் வரிகள் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.
Aug 26, 2011
போட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்
5 Commentsஅடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை (Image Editing) மென்பொருளாக இருக்கிறது. புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்படுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. போட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள். இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும். இந்த வகை கோப்புகளை உங்கள் கணிணியில் போட்டோஷாப் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். இது ஒரு கட்டண மென்பொருள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Aug 25, 2011
கூகிள் +1 பட்டனில் புதிய வசதிகள் – Sharing & Inline Annotations
13 Commentsவலைத்தளத்தை கூகிள் தேடலில் முன்னிலைப் பெறச் செய்ய உதவியாக இருப்பது கூகிள் +1 பட்டன் ஆகும். நமது வலைப்பதிவை படிப்பவர்கள் இந்த பட்டனைக் கிளிக் செய்து விட்டுச் செல்வார்கள். இது வெறும் ஓட்டுப்போடும் பட்டனாக மட்டுமே இருந்தது. ஆனால் நமது பதிவுகளை கூகிள் பிளசில் நண்பர்களோடு பகிர / Share செய்வதற்கு என்று எந்த வசதியும் இல்லை. மற்றொரு சமூக வலைத்தளமான Facebook ஐ எடுத்துக் கொண்டால் செய்திகளை அந்தந்த வலைப்பக்கத்தில் இருந்தே பகிர்வதற்கு Facebook Like, Share பட்டன்கள் இருக்கின்றன.
Aug 23, 2011
ஹைடெக் முதல்வர்
13 Commentsஅரசாங்கத்தின் செயல்பாடுகளும் சட்டதிட்டங்களும் குடிமக்களுக்கு வெளிப்படையாக எப்போதும் இருந்ததில்லை. அதனாலேயே பலரும் எந்தப் பிரச்சினைக்கும் யாரையும் அணுகாமலே இருந்து விடுகின்றனர். முதன் முறையாக மாநில முதல்வரின் செயல்பாடுகளை யாவரும் அறிந்து கொள்ளும் படி செய்திருக்கிறார் கேரள முதல்வர் திரு.உம்மன் சாண்டி. இதன் படி முதலமைச்சரின் பிரத்யேக அறை, அலுவலக அறையில் நடக்கும் செய்லபாடுகளை லைவ் ஆக பார்க்க முடியும்.
Aug 21, 2011
டுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி?
8 Commentsடுவிட்டர் நமது செய்திகளை நண்பர்களுக்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ள பயன்படுத்தப் படும் ஒரு சமூக வலைத்தள சேவையாக இருக்கிறது. இதன் கட்டுப்பாடான 140 எழுத்துகளுக்குள் செய்தி இருக்க வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான விசயம். அத்தனை எழுத்துக்குள் நமது செய்தியை புரிகிற மாதிரியும் பொருளுடைய மாதிரியும் அமைப்பது மேலும் சுவாரசியத்தைத் தரும். சொற்களை மட்டுமே பகிர்வது வலைத்தளத்தின் பலவீனம் என உணர்ந்து தற்போது படங்களையும் பகிரும் வசதியைக் கொண்டு வந்துள்ளார்கள்.
Aug 16, 2011
யாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க
11 Commentsஇரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகிள் தனது ஆன்லைன் வீடியோ தளமான யூடியுபில் (Youtube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Office என்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது. யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு வந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று கூகிளின் சேவையைப் பின்பற்றி ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
Aug 11, 2011
கூகிள் பிளஸ் அப்டேட்களை உங்கள் வலைப்பூவில் காண்பிக்க
13 Commentsகூகிளின் புதிய சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை வெறும் பொழுதுபோக்கு விசயமாக மட்டுமே பார்க்காமல் நமது வலைப்பூவிற்கு எந்த வகையில் பொருத்தமாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொள்வது அவசியம். நமது வலைப்பூவில் எழுதப்படும் பதிவுகளை கண்டிப்பாக கூகிள் பிளஸில் அப்டேட் செய்தால் நம்மை பின் தொடரும் நண்பர்கள் உடனடியாக அறியவும் படிக்கவும் உதவியாக இருக்கும். இதோடு மட்டுமின்றி உங்கள் கூகிள் பிளஸ் பக்கத்தில் நீங்கள் பகிரும் செய்திகளை/தகவல்களை உங்கள் வலைப்பூவில் காண்பித்தால் உங்களைப் பற்றிய அப்டேட்களை வாசகர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதற்கு Widgetplus என்ற இணையதளம் உதவுகிறது.
Aug 6, 2011
ஆனந்த விகடன் வரவேற்பறையில் பொன்மலர் பக்கம் – நன்றி நண்பர்களே!
90 Commentsதமிழின் முண்ணணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள வலைப்பதிவை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். ஒவ்வொரு முறையும் விகடனைப் படிக்கும் போது என்னுடைய வலைப்பதிவு வந்துள்ளதா என ஆர்வம் மேலோங்கி அந்தப் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். சின்ன வயதிலிருந்தே ரசித்துப் படிக்கும் புத்தகங்களில் விகடனும் ஒன்று. ஏனெனில் விகடனின் அங்கீகாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. ஆச்சரியமாக இந்த வார 10.08.2011 விகடன் இதழில் என்னுடைய வலைப்பதிவைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனந்த விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Aug 5, 2011
ஆடியோ கோப்புகளை இணைக்க கன்வெர்ட் செய்ய Audio Convert Merge
7 Comments
கணிணியில் பாடல்கள் கேட்பதற்கு ஆடியோ கோப்புகள் நிறைய வைத்திருப்போம். சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாடல்களை இணைத்து தொடர்ச்சியாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம். எதேனும் பள்ளி/கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறிய சிறிய ஆடியோ பகுதிகளை ஒன்றாக இணைத்து தொடர்ச்சியாக வருவது மாதிரி செய்வார்கள். இதற்கு பயன்படும் ஒரு இலவச மென்பொருள் தான் Audio Convert Merge free.
Read More
Aug 1, 2011
கூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச்சொற்கள் (Adsense Keywords)
15 CommentsGoogle Adsense சேவை மூலம் இணையத்தில் பலரும் சம்பாதித்து வருகின்றனர். விளம்பரதாரர்கள் கூகிளின் Adwords சேவை மூலம் விளம்பரங்களை கூகிளிடம் கொடுக்கிறார்கள். அதனிடமிருந்து வலைத்தளம் வைத்திருப்பவர்கள் விளம்பரங்களை தமது வலைப்பக்கங்களில் இட்டு அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிந்தவை. இதில் நன்றாக சம்பாதிக்க பொருத்தமான குறிச்சொற்களுடன் (Keywords) கட்டுரைகள் இருக்க வேண்டும். குறிச்சொற்கள் என்றால் வித்தியாசமாக நினைக்க வேண்டாம். அதாவது முக்கியமான சொற்களே குறிச்சொற்கள் எனப்படும். முக்கிய சொற்களை கட்டுரையில் தேவையான அளவில் பயன்படுத்தல் வேண்டும். அதுவும் கூகிள் எதிர்பார்க்கிற சொற்கள் இருப்பின் வருமானம் அதிகளவில் வரும்.