Feb 25, 2012

உங்கள் இணையதளம் சீனாவில் முடக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய


Check Your Site Blocked in China or Notசீனா மிகுந்த கட்டுக்கோப்பான நாடாக பெயர் பெற்றது. இணையத்தின் வளர்ச்சியும் தாக்கமும் சீனர்களுக்குப் பிடித்திருந்தாலும் அரசின் நிர்வாகக் கொள்கைக்கு ஏற்ப தான் அங்கே இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதனுடைய இணையத் தணிக்கை முறையாலே (Internet Censorship) கூகிளுக்கும் சீனாவுக்கும் பலத்த சண்டை ஏற்பட்டு கூகிள் சீனாவிலிருந்து விலகியது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

சீனாவின் இணையத் தணிக்கை விதிகளின் படி பல இணையதளங்கள் அங்கே முடக்கப்பட்டு மக்கள் பார்த்துவிடாத படிக்குச் செய்திருக்கிறார்கள். சீனாவில் முடக்கப்பட்டுள்ள சில முக்கிய தளங்கள் கீழே,
1. Facebook
2. Youtube
3. Twitter
4. Google Docs
5. Picasa
6. Blogger Blogs

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய ஒரு இணையதளம் உதவுகிறது. http://www.blockedinchina.net/ என்ற இந்த தளம் சீனாவின் ஐந்து முக்கிய நகரங்களான Beijing, Shenzen, Mangolia, Heilongjiang , Yunnan போன்றவற்றின் சர்வர்களில் நமது இணையதளத்தைச் சோதித்துத் தருகிறது. பிளாக்கர் தளங்கள் முடக்கப்பட்டிருப்பினும் என்னுடைய தளத்தைச் சோதித்துப் பார்த்ததில் கீழ்க்கண்டவாறு சரியாகவே வந்தது.
Check Your Site Blocked in China or Notடுவிட்டர் தளம்
Check Your Site Blocked in China or Not
சுட்டி: Check Your site blocked in China or Not - http://www.blockedinchina.net/

இதைப் போல சீனா உட்பட மற்ற நாடுகளிலும் உங்கள் இணையதளம்/ப்ளாக் தெரிகிறதா என்று கண்டறிய சில இணையதளங்கள் உதவுகின்றன.

http://www.just-ping.com/index.php
http://www.watchmouse.com/en/ping.php
http://www.websitepulse.com/help/testtools.china-test.html


15 comments:

  1. என்னுடைய தளம் block பண்ணி தாங்க இருக்கு

    ReplyDelete
  2. சீனாவில் நுழைய ஏதாவது வழி இருந்த நீங்களே சொல்லுங்க

    ReplyDelete
  3. //கிராமத்து காக்கை,
    சீனாவில் நுழைய ஏதாவது வழி இருந்த நீங்களே சொல்லுங்க//


    அதுக்கும் வழி இருக்கு. இன்னொரு பதிவில் சொல்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  4. என்னுடைய தளம் ஓக்கே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லீங்க...

    தகவலுக்கு நன்றி தோழி...

    ReplyDelete
  6. //////
    கிராமத்து காக்கை, February 25, 2012 4:36 PM

    என்னுடைய தளம் block பண்ணி தாங்க இருக்கு

    //////////


    இதுமாதிரி ஏதும் இல்லீங்க..
    சரியாக பாருங்க...

    ok- ன்னுதான் வருது...

    ReplyDelete
  7. இங்கே என் பதிவை யாரும் படிப்பதில்லை .. அங்க யாரு பார்க்க போறா ?

    ReplyDelete
  8. அற்புதமான பதிவு தோழி. நன்றி ! வாழ்த்துக்கள்.

    பொன்மலர் நீங்க தமிழர்களுக்கு மட்டும் இல்லை. உங்க பதிவுகள் மூலம் உலகத்துக்கே நன்மை செய்கிறீர்கள் SO , உங்க பிளாக்கை யாரும் தடை செய்ய மாட்டார்கள்.

    என்னது, சீனாவில் நுழைய வழி சொல்லப்போறீங்களா? பாஸ் போர்ட் விசா இல்லாமலா? :-))
    ---------

    //இங்கே என் பதிவை யாரும் படிப்பதில்லை .. அங்க யாரு பார்க்க போறா ?//

    சிரிக்க வெச்சுட்டீங்க ராஜா சார்..

    ReplyDelete
  9. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் www.pothigai.in என்ற என்னுடைய வலைப்பூ தடைசெய்யப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது. ஆனால் இவ்வலைப்பூவிற்கான www.pothigai777.blogspot.com என்ற அசல் முகவரியினை கொடுத்தால் தளம் கிடைப்பதாகக் காட்டுகிறது. எப்படி? சகோதரிக்குக் தெரிந்தால் விளக்கவும்.

    ReplyDelete
  10. இப்போ இருக்கும் இணைய பிரச்சனையில் இது ஒரு முக்கியமான பதிவு...தகவலுக்கு நன்றி சகோதரி...

    சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

    ReplyDelete
  11. உங்கள் தளத்தில் நல்ல பயன் தரும் தகவள் இருக்கிறது அருமை

    by manoranjan ulundurpet

    ReplyDelete