
பல இணையதளங்களில் கருத்தோ அல்லது செய்திகளைச் சேர்க்கும் போது Smileys அல்லது Symbols என்று சொல்லப்படும் குறியீடுகள் மேலும் அழகூட்டும். சில நேரத்தில் நமது உணர்ச்சிகளை பிரதிபலிக்கக் கூடிய வண்ணம் இருக்கும். உதாரணமாக கோபம், சிரிப்பு, அழுகை போன்ற செய்தியின் தன்மைக்கு ஏற்பப் பயன்படுத்தும் போது பொருத்தமாக இருக்கும். ஆனால் இவைகளைச் சேர்க்க டுவிட்டர் அனுமதிப்பதில்லை.
இதற்கு Twitter Symbols என்ற இணையதளம் உதவுகிறது. இதில் பல்வேறான தலைப்புகளில் பல குறியீடுகள் கொடுக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் டுவிட்டரில் பிடித்த குறியீடுகளுடன் சேர்த்து செய்திகளைப் பகிர முடியும். இந்த இணையதளத்திற்கு சென்று Connect with Twitter என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்கள் டுவிட்டர் பெயர், கடவுச்சொல் கொடுத்து இணைந்து கொள்ளவும்.


மற்றொரு முறை :
Twitterkeys என்கிற புக்மார்க் சேவையின் மூலமும் டுவிட்டரில் குறியீடுகளைச் சேர்க்கலாம். ஆனால் மேற்குறிப்பிட்ட சேவையை விட இதில் குறியீடுகள் குறைவு தான். சிலருக்கு இந்த முறை கூட எளிதாக இருக்கலாம். கீழே இருக்கும் சுட்டியைக் கிளிக் செய்து உங்கள் வலை உலவியின் புக்மார்க் பாரில் (Bookmark bar) சேர்த்துக் கொள்ளவும். இதனைக் கிளிக் செய்து அப்படியே மவுசால் இழுத்துக் கொண்டு போய் புக்மார்க் பாரில் கொண்டு போய் விட்டால் போதும் இணைந்து விடும். (Drag and drop method)
Twitterkeys

Tweet | |||
நல்லா இருக்கு .
ReplyDeleteவிண்டோஸ் 8 இன் ஸ்கின் தீம் டிசைன் எப்படி இருக்கும்
இனி ஸிம்பல்சோட கலக்குவோம்
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ட்விட்டரைப் பற்றியான பயனுள்ள பகிர்வு நன்றியுடன் பாராட்டுக்கள்
ReplyDeleteUsefull tips.
ReplyDeleteபுதிய தகவல் பகிர்வுக்கு நன்றிங்க!
ReplyDeleteதகவலுக்கு நன்றி பாவித்துப்பார்த்திடுறேன்
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.