Mar 9, 2011

பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி?


பிளாக்கரில் நமது வலைத்தளத்தின் அடைப்பலகை குறிப்பிட்ட அகலத்தில் அமைந்திருக்கும். பெரும்பாலும் அடைப்பலகை இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டு இருக்கும். முதன்மைப்பகுதியாக கட்டுரைகள் (Posts Section) இருக்கும் பகுதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக சைட்பார் (Side bar) இருக்கும். சிலரின் அடைப்பலகையில் இரண்டு சைட்பார்கள் கூட இருக்கும். சில அடைப்பலகைகளில் முதன்மைப்பகுதியின் அகலம் குறைவாக இருக்கும். அவர்களின் கட்டுரை ஏதோ இடமில்லாமல் நெருக்கி எழுதப்பட்டதைப் போல இருக்கும். சில அடைப்பலகைகளில் சைட்பாரின் அகலம் அதிகமாக இருக்கும். இதில் எதற்கு இவ்வளவு இடம் என்று தோன்றும். இவை இரண்டையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது எப்படி?

கட்டுரைகள் நன்றாக விசாலமாக தெரிவதற்கு main பகுதியின் அகலத்தைக் கூட்டியும் சைடுபாரின் அகலத்தை குறைத்தும் வைத்துக்கொள்ளலாம். இல்லை சைடுபாருக்கு கொஞ்சம் அகலம் தேவையென்றால் main பகுதியில் குறைத்து சைடுபாரில் அளவை கூட்டிக்கொள்ளலாம்.

லேஅவுட் முறையில் அமைந்த அடைப்பலகைகளில் அதன் HTML கோடிங் சென்று CSS வரிகளை மாற்றுவதன் மூலம் விரும்பிய அளவுக்கு வலைத்தளத்தின் அகலத்தை வடிவமைக்கலாம்.


1 .outer_wrapper - என்பது அடைப்பலகையின் மொத்தமான பகுதியாகும். இதற்குள் தான் மற்றவையான header_wrapper, main_wrapper, sidebar_wrapper போன்றவை அடங்கும்.
2.header_wrapper - என்பது வலைத்தளத்தின் தலைப்புப் பகுதியை மட்டும் குறிக்கும்.
3.main_wrapper - என்பதில் பதிவுகள் (Posts) இருக்கும் பகுதியை குறிக்கும்.
4.sidebar_wrapper - என்பதில் வலைத்தளத்தின் வலது பக்கம் இருக்கும் சைடுபாரைக் குறிக்கும்.

outer_wrapper பகுதியின் அகலமும் header_wrapper பகுதியின் அகலமும் ஒன்றாக இருக்க வேண்டும். ஏன் என்றால் மேலிருந்து கீழாக இவை தொடர்ச்சியாக வரும் பகுதிகளாகும். இவற்றின் அளவுகள் px (pixels) எனக் குறிப்பிட வேண்டும். இதன் அதிகபட்ச அளவாக 1000px வரை குறிப்பிடலாம். இதற்கு மேல் போனால் நன்றாக இருக்காது.

மேலும் main_wrapper பகுதியின் அகலத்தையும் sidebar_wrapper பகுதியின் அகலத்தையும் கூட்டினால் outer_wrapper பகுதியின் அகலத்திற்கு சரியாக வரவேண்டும்.
outer_wrapper = main_wrapper + sidebar_wrapper .

இவை இரண்டுக்கும் 50 புள்ளிகளுக்குள் வித்தியாசம் இருந்தால் நன்றாக இருக்கும்.(எ.கா)

outer_wrapper = 1000px
main_wrapper = 700px
sidebar_wrapper = 250px

செய்யும் முறை :

பிளாக்கர் தளத்தில் சென்று Design -> Edit Html என்பதை கிளிக் செய்யவும். பின்னர் மேலே சொன்ன நான்கு பகுதிகளையும் Ctrl+F கொடுத்து தேடி width என்ற வரியில் உள்ள மதிப்புகளை குறித்துக்கொள்ளவும். பின்னர் உங்களுக்கு வேண்டிய பகுதியின் அகலத்தை கூட்டியும் குறைத்தும் அழகுபடுத்தலாம்.

இரண்டு சைடுபார்கள் உள்ளவர்கள் main_wrapper பகுதிக்கு போக மீதமுள்ள அளவுகளை இரண்டாக பிரித்து கொடுக்கவும். மேலும் சில அடைப்பலகைகளில் அடிப்பகுதியும் (Footer) இருக்கும். அப்படி இருந்தால் outer_wrapper க்கு கொடுத்த மதிப்பையே Footer பகுதியிலும் கொடுக்கவும். அப்போது தான் வலைத்தளம் மொத்தமும் ஒருங்கிணைக்கப்படும்.

இதனை செய்வதற்கு முன்னர் உங்கள் வலைதளத்தை ஒருமுறை பேக்கப் எடுத்துக்கொள்வது நலமாகும்.

தொடர்புடைய பதிவுகள் :
1.பிளாக்கரில் நாம் எழுதிய பதிவு எத்தனை பேரால் படிக்கப்பட்டது என்பதை அறிய...
2.வலைத்தள உத்திகள் : பதிவுகளுக்கு ஏற்ப Permalinks அமைப்பது எப்படி?
3.பிளாகர் உத்திகள் : HTML/CSS நிரல்வரிகளை பதிவுகளில் காட்டுவது எப்படி?
4.வலைத்தளத்தில் உள்ள இணைப்புகளை(Links) புதிய விண்டோவில் திறக்கச்செய்ய
5.நமது வலைப்பதிவில் தற்போது ஆன்லைனில் இருப்பவர்களின் விவரங்களை அறிய...
6.உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி? 7.வலைத்தளத்தை மேம்படுத்த அவசியமான 10 டிப்ஸ்

10 comments:

  1. நல்ல பதிவு.
    தற்போது எங்களுக்கு மிகவும் உபயோகரமாக இருக்கிறது.
    தொடர்ந்து எழுதுங்கள் அம்மா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எனக்கு உண்மையிலேயே! பயனுள்ளதாக இருந்தது.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றிங்க :))

    ReplyDelete
  4. thanks

    ல் உள்ள மாநிலங்கள்

    தனிநபர் வருவாயில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.

    இந்தியாவின் தனிநபர் ஆண்டு வருவாய் 2009-10 கணக்கீட்டின்படி ரூ 46492 ஆக உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் இன்று தெரிவிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் தனிநபர் ரூ 25 லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் வரும் 2050ம் ஆண்டு இந்திய தனி நபர் வருமானம் ரூ 18 லட்சத்துக்கும் அதிகமாக உயரும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. ஆனால் அப்போதும் கூட முதல் 10 இடங்களுக்குள் இந்தியா வர வாய்ப்பில்லையாம்.

    தனி நபர் வருவாயில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

    அவற்றின் விவரம் (மதிப்பு டாலர்களில்):


    Read more: http://karurkirukkan.blogspot.com/2011/03/blog-post_10.html#ixzz1GAhXzn8F

    ReplyDelete
  5. its very useful thank u for ur tips

    ReplyDelete
  6. நல்ல பயனுள்ள தகவல்
    நன்றி

    ReplyDelete
  7. அட்டேடேடே நான் எழதுனும்னு நெனைச்சுட்டிருந்தேன்.. முந்திட்டியேலே...! பரவால்ல நான் எழுதறதவிட நீங்க ரொம்ப நல்லாவே எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..! தொடருங்கள்..!

    ReplyDelete
  8. இது தான் ரொம்ப வருடங்களாக புரியாம இருந்தது....மிக்க நன்றி.

    ReplyDelete
  9. நல்ல உபயோகமான பதிவு...
    design -template designer -
    adjust widths சென்றும் அகலத்தை மாற்றலாம் என்று நினைக்கிறேன்.. நன்றி....
    rajeshnedveera

    ReplyDelete